கொரோனா நோய் தடுப்பு கருவிகளுக்காக குறைந்தது 100 பில்லியன் டாலர்களை செலவிட வேண்டும் – WHO
கொரோனா நோய் தடுப்பு கருவிகளுக்காக குறைந்தது 100 பில்லியன் டாலர்களை செலவிட வேண்டும்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டு அரசாங்கமும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பும், அமெரிக்கா, பிரேசில் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் முதல் மூன்று இடத்தில் உள்ளது.
இந்நிலையில், உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அவர்கள் கூறுகையில், கொரோனா நோய் தடுப்பு கருவிகளுக்காக குறைந்தது 100 பில்லியன் அமெரிக்கா டாலர்களை செலவிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும், முதல் கட்டமாக உடனடி தேவையாக ACT கருவிக்காக 31.3 பில்லியன் அமெரிக்க டாலர்களை செலவிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.