சீனாவில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா…! 460 விமான சேவைகள் ரத்து…!
சீனாவில் புதிய டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவியதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 460 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சீனாவின் வுகான் மாகாணத்தில் தான் முதன் முதலாக கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து உலகின் அனைத்து நாடுகளிலும் இந்த வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. இந்த நிலையில் சமீப நாட்களாக சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் இருந்த நிலையில், தற்போது சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் திடீரென்று கொரோனா பெற்று பரவ தொடங்கியுள்ளது.
கடந்த சனிக்கிழமை அன்று ஆறு பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.மேலும் சென்னை விமான நிலையத்தில் பணிபுரியும் 21 வயது பெண்ணுக்கும் புதிய டெல்டா வகை கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 460 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் விமான நிலையத்தில் உள்ள கடைகள் மற்றும் உணவு விடுதிகள் மூடப்பட்டுள்ள நிலையில், பெண்ணுடன் தொடர்பிலிருந்த 110 பேரை கண்டறிந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் தனிமைப் படுத்தி உள்ளனர். மேலும், சுகாதாரத்துறை அதிகாரிகள் பரிசோதனையை அதிகரித்துள்ளனர்.