இங்கிலாந்தில் புதிய வகை ஓமைக்ரான் வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா கட்டுப்பாடுகள் அடுத்த வாரம் முதல் தளர்த்தப்படும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு வருடமாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டின் அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், முதலில் தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஓமைக்ரான் வகை வைரஸ் ஆனது இங்கிலாந்திலும் அதிக அளவில் பதிவாகி வருகிறது. அங்கு இந்த வகை வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்கள் சில கட்டுப்பாடுகளை அறிவித்து இருந்தார்.
இந்நிலையில் கட்டுப்பாடுகள் அடுத்த வாரம் முதல் தளர்த்தப்படும் என்றும் வீட்டிலிருந்து பணிபுரிந்தவர்கள் இனி வீட்டில் இருந்து வேலை செய்வதற்கான தேவையில்லை என்றும், கட்டாய முகக்கவசம் உட்பட கொரோனா நடவடிக்கைகள் அனைத்தும் அடுத்த வாரம் முதல் முடிவுக்கு கொண்டு வரப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா : ரஷ்யா -உக்ரைன் போர் என்பது இன்னும் முடிவுக்கு வராத ஒரு போராக இருந்து வருகிறது. இதன் காரணமாக…
சென்னை : இன்று சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி போட்டி துபாயில் நடைபெறுகிறது. இதில் ரோஹித் சர்மா…
துபாய் : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் அரையிறுதி இன்று துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. முதல்…
நாகை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நாகப்பட்டினத்திற்கு பயணம் மேற்கொண்டிருந்தார். இப்பயணத்தில் நாகை மாவட்டத்தில் முடிவுற்ற திட்டங்கள் தொடங்கி…
சென்னை : தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் கடன் நிலவரம் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் தமிழக பாஜக மாநிலத்…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியில் நாளை நடைபெறவிருக்கும் அரையிறுதி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகளும் நாளை…