ஒரே நாளில் 1 லட்சத்து 70 ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதி!

உலகம் முழுவதும் ஒரே நாளில் 1 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்லும் நிலையில், அந்தந்த நட்டு அரசாங்கம் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டு தான் உள்ளது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகம் முழுவதும் 1,71,508 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் ஒரே நாளில் 3,583 பேர் உயிரிழந்து உள்ளனர்.
மொத்தமாக உலகம் முழுவதும் தற்பொழுது 11,741,256 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 5,40,680 பேர் உயிரிழந்துள்ளனர், 6,736,714 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 4,555,393 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.