அமெரிக்காவில் கொரோனா தடுப்பு முகாமை நடந்தும் அழகு நிலையம்….!
அமெரிக்காவின் விஸ்கொன்சின் மாகாணத்தில் உள்ள “Gee’s clippers barber and beauty” சலூனில் சனிக்கிழமை தோறும் கொரோனா தடுப்பு முகாமை ஒருங்கிணைத்து நடத்துகிறது.
உலகம் முழுவதும் மீண்டும் கொரோன வைரஸ் தனது தீவிர தாக்குதலை தொடங்கியுள்ளது. இந்த வைரஸ் பதிப்பில் வல்லரசு நாடான அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில்,அங்கு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. இதனையடுத்து, அமெரிக்காவின் விஸ்கொன்சின் மாகாணத்தில் உள்ள “Gee’s clippers barber and beauty” சலூனில் சனிக்கிழமை தோறும் கொரோனா தடுப்பு முகாமை ஒருங்கிணைத்து நடத்துகிறது.
இதுகுறித்து அந்த சலூன் கடை நிர்வாகம் கூறுகையில், ‘கொரோனா தடுப்பூசி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பாதுகாப்பாக வளர்க்க உதவுகிறது. இது நோயின் இருந்து பாதுகாக்கிறது. தடூப்பூசி போட்டுக் கொள்வதால் நம்மை சுற்றி உள்ள அனைவரையும் பாதுகாப்பாக வைத்து கொள்ள முடியும். எனவே இவற்றை கருத்தில் கொண்டு மார்ச் 27 முதல் ஏப் 17 வரையில் பிரதி சனிக்கிழமை எங்களது சலூனில் தடுப்பு மருந்து முகாமை ஒருங்கிணைத்துள்ளோம்.’ என தெரிவித்துள்ளது.