உலகம் முழுவதும் கொரோனா பரவல் ஒழியவும், நாட்டுப் பாதுகாப்புக்காவும் ஏழுமலையானிடம் வேண்டுதல் வைத்து திருப்பதி சென்று முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் தரிசனம் செய்துள்ளார். ஊரடங்கில் கோவிலுக்கு சென்ற முதல் முதல்வர் இவரே என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து வெளியான தகவல்:
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நேற்று முன்தினம் இரவு, 11 மணிக்கு தன் குடும்பத்துடன் திருமலையை நோக்கி சென்ற மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளஹானை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று முதல்வர் உள்ளிட்ட குடும்பத்தார்க்கு அதிகாரிகள் அனைவருக்கும் சானிடைசர் வழங்கிய பின் மலர்செண்டு கொடுத்தனர்.
திருமலையில் இரவு தங்கிய முதல்வர் குடும்பத்தினர் நேற்று காலை ஏழுமலையானை தரிசித்தனர். தரிசனம் முடித்து திரும்பிய அவர்களுக்கு தேவஸ்தான அதிகாரிகள் ஏழுமலையான் பிரசாதம், திருவுருப்படம் போன்றவற்றை வழங்கினர்.
கோவில் பிரசாதங்களை பெற்றுக்கொண்ட அவர் நாதநீராஜன மண்டபத்தில் நடைபெற்ற சுந்தரகாண்ட பாராயணத்தில் குடும்பத்தினருடன் பங்கேற்றார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சௌஹான் கூறியதாவது நாடு மிக முக்கியமான இரு பிரச்சனைகளை தற்போது எதிர்கொண்டு உள்ளது. இதில் முதலில் கட்டுக்கடங்காமல் பெருகி வருகின்ற கொரோனா வைரஸ். இரண்டாவது எல்லையில் ஏற்பட்டுள்ள மிக பதட்டமான சூழல்.இ இரண்டிலிருந்து நாட்டையும் நாட்டு மக்களையும் காத்தருள வேண்டும் என ஏழுமலையானிடம் பிரார்த்தனை செய்தேன்.சுந்தர காண்ட பாராயணம் பிரச்சனைகளுக்கு எல்லாம் நல்ல தீர்வினை தெரியபடுத்தும். அதனால், அதில் கலந்து கொண்டது மனதிற்கு நிறைவாக உள்ளது என்று தெரிவித்த அவர் அகண்டம் அருகில் தேங்காய் உடைத்து கற்பூர ஆரத்தி சமர்பித்தார்.
பின் அங்கிருந்து ஜபாலி சென்று ஆஞ்சநேயரை குடும்பத்துடன் வழிபட்டார். பின்னர் திருச்சானுார் சென்று பத்மாவதி தாயாரை தரிசித்து பிரசாதங்களை பெற்றுக் கொண்டு மத்திய பிரதேசம் புறப்பட்டு சென்றார். கொரோனா தொற்றால் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்திற்கு பின் வெளி மாநிலத்திலிருந்து ஏழுமலையானை தரிசிக்க வந்த முதல் முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் நாளுக்கு குறிப்பிட்ட எண்ணிகையில் பக்தர்களை அனுமதித்து உரிய இடைவெளியோடு தரிசனத்தை வழங்கி வருகிறது திருமலை என்பதும் குறிப்பிடத்தக்கது.
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…