மீண்டும் கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா! ஸ்பெயினில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்!
ஸ்பெயினில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த, அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸை தடுக்க மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றாலும், இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து தன வருகிறது.
இந்நிலையில், ஸ்பெயினில், இதுவரை இந்த கொரோனா வைரஸால், 1,110,372 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 34 ஆயிரத்திற்கும் மேற்போக்காட்டோர் உயிரிழந்துள்ளனர். தற்போது கொரோனா வைரஸின் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிற நிலையில், ஸ்பெயினில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் மாகாணங்களுக்குள் பயணம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.