கொரோனா நோயாளிக்கு ரத்தத்தில் அதிக சர்க்கரை அளவு இருந்தால் உயிரிழப்பு ஏற்படும் .! ஆய்வில் தகவல் ..?

Default Image

கொரோனா பிறப்பிடமாக கூறப்படும் சீனாவில் உள்ள உகானில் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வில் கொரோனா நோயாளிகளுக்கு ரத்தத்தில் இயல்வை விட அதிகமான சர்க்கரை அளவு இருந்தால் தான் அதிக உயிரிழப்பு நடப்பதாக அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

உகான்நகரில் உள்ள அறிவியல் தொழில்நுட்பப் பல்கலைக்கழக யூனியன் மருத்துவமனை மற்றும் டோங்கி மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் யிங் ஜின் மேற்கொண்ட இந்த ஆய்வின் முடிவுகளை  டயாபெடாலாஜியா என்ற இதழில் வெளியிடப்பட்டு உள்ளது.

அதில், இந்த ஆய்வுக்காக உயிழந்த 114 கொரோனா நோயாளிகள் உட்பட 605 கொரோனா நோயாளிகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டனர். இதில் 34 % பேர் அதாவது 208 நோயாளிகளுக்கு ரத்தத்தில் அளவுக்கு அதிகமாக சர்க்கரை இருப்பது தெரியவந்தது. 29 % நோயாளிகளுக்கு டைப் 2 வகை நீரிழிவு நோய் இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் 17 % நோயாளிகள் சர்க்கரை நோயின் ஆரம்ப அறிகுறிகளில் இருந்தனர்.

ரத்தத்தில் அதிக சர்க்கரை இருந்தாலும் சரி , நீரிழிவு நோயாளிகளாக இருந்தாலும் சரி, அல்லது நோய்கணிக்கப்படாத ஆனால் ரத்தத்தில் அதிக சர்க்கரை இருப்பவர்களாக இருந்தாலும் சரி கொரோனா நோய் ஏற்பட்டதால் தான் உயிழப்பு விகிதம் அதிகமாக உள்ளது.

எனவே கொரோனா நோயாளிகளுக்கு நீரிழிவு உள்ளதா..? ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக உள்ளதாக என பரிசோதனை செய்ய அவசியம் என்று இந்த ஆய்வில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்