அதிகரிக்கும் கொரோனா.. தென் ஆப்பிரிக்காவில் கட்டுப்பாடுகள் அதிகரிப்பு!
தென் ஆப்பிரிக்காவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், அங்கு ஊரடங்கு கட்டுபாட்டுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் சிறில் ரமபோசா தெரிவித்துள்ளார்.
உலகளவில் கொரோனா பரவல் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்கா, இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகள் தீவிரமடைந்துள்ளது. இதில் பல தடுப்பூசிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதை தொடர்ந்து, தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியுள்ளது.
கொரோனா வைரஸே இன்னும் கட்டுக்குள் வராத நிலையில், தற்பொழுது பிரிட்டனில் புதிய வகையான உருமாறிய கொரோனா வைரஸ், அதிவேகமாக பரவதொடங்கியது. இதனால் 50-க்கும் மேற்பட்ட உலக நாடுகள் பிரிட்டனுடனான விமான சேவைகளை நிறுத்தியுள்ளது. ஆயினும் பிரான்ஸ், ஜப்பான் ஸ்பெயின், உள்ளிட்ட சில நாடுகளில் இந்த புதிய வகையான கொரோனா வைரஸ் கண்டறியப்பயுள்ளது.
அந்தவகையில் இந்த உருமாறிய கொரோனா, தென் ஆப்பிரிக்காவிலும் கண்டறியப்பட்டுள்ளது. தற்பொழுது தென் ஆப்பிரிக்காவில் கொரோனா பரவல் நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் முதல் 14 ஆயிரமாக அதிகரித்துள்ள நிலையில், அந்நாட்டில் கட்டுப்பாடுகள் கடுமையாக விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தென் ஆப்பிரிக்காவில் மதுபானங்களை விற்க தடை விதிக்கப்பட்டு, ஊரடங்கை மூன்று மடங்கு கடுமையாக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டில் பிரதமர் சிறில் ரமபோசா தெரிவித்துள்ளார்.