4-வது பரிசோதனையில் பிரேசில் அதிபருக்கு கொரோனா நெகட்டிவ்.!
பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனோராவுக்கு செய்யப்பட்ட நான்காவது பரிசோதனையில் கொரோனா தொற்று நெகட்டிவ் என வந்துள்ளது.
கடந்த ஜூலை 7 -ஆம் தேதி பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனோராவுக்கு கொரோனா தொற்று உறுதிப்பட்டது. அவர் இல்லத்தில் தனிமைப்படுத்தப்பட்டார். இந்நிலையில், தான் விரைவில் பணிக்குச் செல்ல வேண்டும், வீட்டில் தனித்திருக்க முடியவில்லை என்று கூறி போல்சனோரா கடந்த ஒரு வாரத்திற்கு முன் 3-வது கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதன் முடிவில் அவருக்கு மீண்டும் கொரோனா இருப்பது உறுதியானது. இதனால், கொரோனா தொற்றிலிருந்து இன்னும் போல்சனாரோ மீளவில்லை என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், நான்காவது சோதனையின் முடிவில் கொரோனா தொற்று நெகட்டிவ் என வந்துள்ளது.
– RT-PCR para Sars-Cov 2: negativo.
– BOM DIA A TODOS. pic.twitter.com/CkdV59yGXP— Jair M. Bolsonaro (@jairbolsonaro) July 25, 2020
இதையடுத்து, போல்சனாரோ தனது ட்விட்டர் பக்கத்தில் “அனைவருக்கும் இனிய காலை வணக்கம்” என்று கூறி பின்னர், கொரோனா தொற்று நெகட்டிவ் என வந்துள்ளது என்று தெரிவித்தார்.
கொரோனாவைப் பற்றிக் கவலைப்படாமல் முகக்கவசம் அணியாமல் சுற்றி வந்து மக்கள் சுதந்திரமாக வெளியே வர வேண்டும் என பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனோரா கூறி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.