கொரோனாவை தடுக்கும் STI-1499 எனும் ஆன்டிபாடி மருந்தை கலிபோர்னியாவை சேர்ந்த சோரெண்டோ தெரடியுடிக்ஸ் பயோ டெக் நிறுவனம் கண்டறிந்துள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொடூர வைரஸாக மாறியுள்ளது கொரோனா வைரஸ். இந்த வைரஸால் இதுவரை உலகம் முழுக்க 46 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
இதனால், கொரோனாவை தடுக்கும் மருந்தை கண்டறிய பலவேறு நாடுகளை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கலிபோர்னியாவை சேர்ந்த பயோடெக் நிறுவனம் கொரோனாவை 100 சதவீதம் தடுக்கும் மருந்தை கண்டறிந்ததாக தகவல் வெளியிட்டுள்ளது. கலிபோர்னியாவில் உள்ள சோரெண்டோ தெரடியுடிக்ஸ் பயோ டெக் நிறுவனம் கொரோனாவை தடுக்கும் STI-1499 எனும் ஆன்டிபாடி மருந்தை கண்டறிந்துள்ளது. இந்த ஆன்டிபாடி செலுத்தப்பட்ட மனித உயிரணுக்களில் கொரோனா நுழைவது முழுவதும் தடுக்கப்பட்டுள்ளது என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த STI-1499 எனும் ஆன்டிபாடி ஒரு மாதத்திற்கு 2 லட்சம் டோஸேஜ் உருவாக்க இயலுமாம். விரைவில் இந்த மருந்து பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தில் பெரும் கனவுடன் அரசியல் வாழ்க்கையை தொடங்கிய சஜி, மாரடைப்பால் மறைந்தது அக்கட்சியினரை சோகத்தில்…
சென்னை : நடிகர் சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தை தொடர்ந்து அடுத்ததாக எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை இருந்தாலும் அவருக்கு…
சென்னை : நேற்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் 2025 - 2026 தாக்கல் செய்யப்பட்டது. அதனை அடுத்து இன்று வேளாண்…