இந்தாண்டுக்குள் கொரோனா தடுப்பூசி.! செப்டம்பர் மாதம் பள்ளி கல்லூரிகள் திறப்பு.!

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பேசுகையில், இந்தாண்டு இறுதிக்குள் கொரோனாவுக்கு தடுப்பூசி கிடைத்துவிடும் எனவும், மற்ற நாடுகள் தடுப்பூசி கண்டறிந்தாலும் அவர்களுக்கு எனது பாராட்டுகளை தெரிவிப்பேன் என கூறியுள்ளார்.
கொரோனா பாதிப்பால் உலகளவில் முதலிடத்தில் இருக்கிறது அமெரிக்கா. இந்த கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அமெரிக்க அரசு போராடி வருகிறது. இதுவரை அமெரிக்காவில் 11 லட்சத்து 88 ஆயிரத்து 150 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 68 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
இந்த கொரோனா பாதிப்பு குறித்தும், அதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் வாஷிங்க்டனில் உள்ள ஒரு தொலைக்காட்சியில் நியூஸ் நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசுகையில், இந்தாண்டு இறுதிக்குள் கொரோனாவுக்கு தடுப்பூசி கிடைத்துவிடும்.
அமெரிக்கா அல்லாத மற்ற நாடுகளில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் தடுப்பூசி கண்டறிந்தாலும் அவரக்ளுக்கு எனது பாராட்டுக்களை தெரிவிப்பேன். எனவும், வரும் செப்டம்பர் மாதத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும். மாணவ மாணவிகள் கல்வியில் எந்த பாதிப்பும் இருக்காது எனவும் அந்த நிகழ்ச்சியில் அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.