ரஷ்யாவில் ரகளை செய்யும் கொரோனா! ஆறே நாளில் 60 ஆயிரம் பேர் பாதிப்பு!
ரஷ்யாவில், கடந்த ஆறு நாட்களில் புதிதாக 60,000 பேருக்கு மேல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் அங்கு பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிரை காவு வாங்கிய நிலையில், தொடர்ந்து இந்த வைரஸானது 200-க்கும் மேற்பட்ட நாடுகளை ஆதிக்கம் செய்து வருகிறது. இந்த வைரஸை அழிப்பதற்கு மருந்து கண்டிபிடிக்கும் பணியில் உலக நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ள நிலையில், இதுவரை இந்த வைரஸை முற்றிலுமாக அழிப்பதற்கான எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்நிலையில், உலகளவில் இதுவரை கொரோனா வைரஸால் 4,012,857 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வல்லரசு நாடான அமெரிக்கா இந்த வைரஸால் அதிகமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையிலும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையிலும் முதலிடத்தில் உள்ளது.
இந்நிலையில், ரஷ்யாவில், கடந்த ஆறு நாட்களில் புதிதாக 60,000 பேருக்கு மேல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 10,669 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும், ரஷ்யாவில் இதுவரை, 187,859 பேர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1,723 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.