இத்தாலியை விட்டு விலகும் கொரோனா.! நேற்று மட்டும் பலி எண்ணிக்கை 174.!
இத்தாலியில் நேற்று மட்டும் 174 பேர் பலியாகியுள்ள நிலையில், அந்நாட்டை விட்டு கொரோனா வைரஸ் படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது.
உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் முதலில் சீனாவில் பரவ தொடங்கி, பின்னர் இத்தாலி, அமெரிக்கா, பிரான்ஸ், ஸ்பெயின், இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளில் பரவி பாதிப்பும், உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, கொரோனா பாதித்த நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளது. முதலில் சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலியில் பாதிப்பும், உயிரிழப்பும் தினந்தோறும் வேகமாக உயர்ந்தது. கொரோனாவால் உயிர்பலி நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கில் கொன்று குவித்தது. இதனால் அந்நாடு என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறி நின்றது.
இந்நிலையில், இத்தாலியில் கொரோனாவின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் மார்ச் மாதம் 10 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு தற்போதுவரை அமலில் உள்ளது. இதன் காரணமாக ஊரடங்கு போடப்பட்ட முதல் நாளில் இருந்து இன்று வரை பாதிப்பும், உயிரிழப்பும் இத்தாலியில் குறைந்து வருகிறது. அதன்படி, நேற்று மட்டும் 174 பேர் பலியாகியுள்ள நிலையில், இத்தாலி நாட்டை விட்டு கொரோனா வைரஸ் படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது. இதுவரை அந்நாட்டில் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 28,884 ஆகவும், பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,10,717 ஆக உள்ளது. உலகளவில் அமெரிக்கா மற்றும் ஸ்பெயினுக்கு அடுத்த மூன்றாவது இடத்தில் இத்தாலி நாடு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.