உலக அளவில் 11 லட்சத்தை கடந்தது கொரோனா பலி எண்ணிக்கை!

உலக அளவில் 11 லட்சத்தை கடந்தது கொரோனா பலி எண்ணிக்கை.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால், பல நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், இந்த வைரஸை தடுக்க மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
உலக அளவில் இந்த வைரஸ் பாதிப்பில், அமெரிக்கா, இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் முதல் மூன்று இடத்தில் உள்ள நிலையில், உலக அளவில் இதுவரை இந்த வைரஸ் பாதிப்பால், 39,175,462 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1,102,941 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 29,378,739 பேர் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs RCB : அதிரடி காட்டி படிதர் அடித்த அரைசதம்.., சிஎஸ்கே அணிக்கு இதுதான் டார்கெட்.!
March 28, 2025
மீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தோனி.! மிரண்டு போன ஆர்சிபி வீரர்கள்! நடையை கட்டிய சால்ட்..
March 28, 2025