பெரும் உயிர்கொல்லி நோயான கொடிய கொரோனா வைரஸ் தொற்றால், உலகிலேயே அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. இந்நிலையில் அமெரிக்காவில் பாதிப்பு தீவிரமாக இருக்கும் நிலையில், பல்வேறு மாகாணங்களில், தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.
கடந்த, ஒரு மாதத்துக்கு மேலாக, வெள்ளை மாளிகையில் இருந்த, அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்த வார இறுதியை, மேரிலாண்டில் உள்ள சொகுசு விடுதியில் கழித்தார். அதன்பின், தனியார் தொலைக்காட்சி ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், அதன் நிருபர்கள் மற்றும் பொதுமக்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, அமெரிக்கா மிக விரைவில், பாதுகாப்புடன், இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும். மீண்டும் வழக்கம் போல பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்பட வேண்டும். இந்த கொடிய வைரசுக்கு எதிரான தடுப்பூசி, இந்தாண்டு இறுதிக்குள் தயாராகி விடும் என்று நான் நம்புகிறேன். அதற்கான முயற்சிகளும் தீவிரமாக நடந்து வருகின்றன. இவ்வாறு, அவர் கூறினார்.
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…
சென்னை : தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரரான டிவால்ட் பிரேவிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். சென்னை சூப்பர்…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
சென்னை : இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள "தக்…
சென்னை : தவெக தலைவர் விஜய், கடந்த மார்ச் மாதம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு…