நம் அண்டை நாடான சீனாவில் உள்ள ஹூபேய் மாகாணத்தின் வூகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் டிசம்பர் மாதம் அந்நாடு கொடிய நோய் தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் அந்நாட்டில் உருவான அந்த தொற்று நோய் கிருமியான கொடிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 210 நாடுகள் வரை பரவியுள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்த வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்து கண்டுபிடிக்க மருத்துவ விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். மருத்துவ அறிஞர்களால் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சிகள் ஒரு பக்கம் நடைபெற்று வந்தாலும் மருத்துவத்துறையினரின் தன்னலமற்ற சிறந்த சேவையின் காரணமாக இந்த கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பலர் மீண்டு வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 10 லட்சத்து 37 ஆயிரத்தை கடந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி,சுமார் 33 லட்சத்து 971 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 20 லட்சத்து 29 ஆயிரத்து 337 பேர் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 50 ஆயிரத்து 962 பேரின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இதுவரை இந்த வைரஸ் தாக்குதலுக்கு 2 லட்சத்து 33 ஆயிரத்து 708 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனாலும், வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 10 லட்சத்து 37 ஆயிரத்து 926 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகளின் விவரங்கள் பின்வருமாறு:
- அமெரிக்கா – 1,51,774
- ஸ்பெயின் – 1,37,984
- இத்தாலி – 75,945
- பிரான்ஸ் – 49,476
- ஜெர்மனி – 1,23,500
- துருக்கி – 48,886
- ரஷியா – 11,619
- ஈரான் – 75,103
- சீனா – 77,610
- பிரேசில் – 35,935
- கனடா – 21,198
- பெல்ஜியம் – 11,576
- பெரு – 10,405
- சுவிட்சர்லாந்து – 23,400
- அயர்லாந்து – 13,386
- மெக்சிகோ – 11,423
- ஆஸ்திரியா – 12,907
உலக நாடுகளில் தற்போது வரை இத்தனை பேர் இந்த கொடிய கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.