இரட்டை கோபுர தாக்குதலை விட மோசமானது கொரோனா- டிரம்ப் .!
கொரோனா பரவல் இரண்டாம் உலகப்போரில் பியர்ஸ் ஹார்பர் துறைமுகத்தின் மீது ஜப்பானிய குண்டு தாக்குதல் மற்றும் இரட்டை கோபுர தாக்குதல் விட மோசமானது என டிரம்ப் கூறினார்.
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. அமெரிக்காவில் நேற்றுவரை கொரோனாவால் 12,66,442 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 74,948 பேர் உயிரிழந்து உள்ளனர். அமெரிக்காவில் தினமும் குறைந்தது 1000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், வெள்ளை மாளிகையில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப் கொரோனா மோசமான தாக்குதல் என்றும் இதுபோன்ற தாக்குதலை உலக நாடுகள் ஒருபோதும் சந்தித்தது இல்லை என தெரிவித்தார். மேலும் கொரோனா வைரஸை ஆரம்பத்திலேயே சீனா தடுத்துத்திருக்க வேண்டும். தற்போது சீனாவை காட்டிலும், அமெரிக்காவில் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனக் கூறினார்.
கொரோனா பரவல் இரண்டாம் உலகப்போரில் பியர்ஸ் ஹார்பர் துறைமுகத்தின் மீது ஜப்பானிய குண்டு தாக்குதல் மற்றும் இரட்டை கோபுர தாக்குதல் விட மோசமானது என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார்.