இந்த 5 நாடுகளில் தான் கொரோனா பாதிப்பு அதிகம்.!

Default Image

உலக முழுவதும் பரவி இருக்கும் கொரோனா வைரசால் அதிகபட்சமாக இந்த 5 நாடுகளில் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகம்.

உலகில் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடூர வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஆய்வாளர்கள் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், கொரோனாவின் பாதிப்பும், உயிரிழப்புகளும் தினந்தோறும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த நிலையில், உலகளவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 42,56,022 ஆகவும், உயிரிழப்பின் எண்ணிக்கை 287,332 ஆகவும் உயர்ந்துள்ளது. வைரஸில் இருந்து 15,27,517 பேர் குணமடைந்துள்ளார்கள். மேலும் சிகிச்சை பெறுபவர்களில் 46,936 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. தற்போது வரை கொரோனா வார்டில் 24,41,173 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்காவில் அதிகபட்சமாக 13 லட்சத்து 85 ஆயிரத்து 834 பேர் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர். அங்கு பலி எண்ணிக்கை 81, ஆயிரத்து 795 ஆக அதிகரித்துள்ளது. ஸ்பெயினில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 26,744 ஆக அதிகரித்துள்ளது. அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,68,143 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 1,77,846 ஆக உயர்ந்துள்ளது.

இதையடுத்து இங்கிலாந்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 32,065 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,23,060 ஆக உயர்ந்துள்ளது. ரஷியாவில் 2,21,344 பாதிக்கப்பட்டு, 2,009 பேர் பலியாகியுள்ளனர். இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 30,739 ஆகவும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 219,814 ஆகவும் உயர்ந்துள்ளது. எனவே, உலகிலேயே கொரோனாவால் வைரஸ் இந்த 5 நாடுகளில் தான் அதிகம் பரவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்