சீனாவில் மீண்டும் அவதாரம் எடுக்கும் கொரோனா..மீண்டும் பொதுமுடக்கம் ?
56 நாட்கள் கழித்துக் பெய்ஜிங்கில் 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பெய்ஜிங்கில் சில பகுதிகளில் பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் பரவதொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம், தற்பொழுது உலக நாடுகளில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. தினம் தினம் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த வைரஸால் பாதிக்கபட்டு வருகின்றனர். மேலும், இந்த வைரஸின் தாக்கத்தை சீனா கட்டுப்படுத்தியுள்ளது. அதைதொடர்ந்து, நியூஸிலாந்தும் தற்பொழுது கொரோனா இல்லா நாடாக மாறியுள்ளது.
56 நாட்கள் கழித்துக் கடந்த வியாழக்கிழமை அன்று பெய்ஜிங்கில் கொரோனா தொற்று மீண்டும் பதிவானது. இந்நிலையில் சீனா, பெய்ஜிங்கில் உள்ள சின்ஃபடி இறைச்சி கடை தொடர்புடையவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, சீனாவில் ஒரே நாளில் 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதில், 6 பேர் உள்ளூர் மக்கள் என்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதன்காரணமாக பெய்ஜிங்கில் சில பகுதிகளில் பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவால் உயிரிழந்த தந்தை உடலை நானே அடக்கம் செய்தேன்- மகன் வேதனை!
சீனாவில் மொத்தமாக 83,075 கொரோனா தோற்று உறுதியாகியுள்ளது. இதில் 74 நோயாளிகள் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனறும் யாரும் கடுமையான நிலையில் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.கொரோனாவிலிருந்து மீண்டு 78,367 பேர் வீடு திரும்பினர். மேலும் இதுவரை 4,634 பேர் கொரோனாவால் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளது.