உறைந்த உணவுகளில் கொரோனா தொற்று! சீனாவில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா!
பிரேசிலிலிருந்து, சீனாவின் வுகாண் மாகாணத்தில், இறக்குமதி செய்யப்பட்ட பன்றி இறைச்சி மற்றும் மாட்டிறைச்சி பாக்கேஜில் கொரோனா தொற்று இருப்பது உறுதி.
சீனாவின் வுகாண் மாஹனத்தில் தான் முதன்முதலாக கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து, இந்த வைரஸானது, உலகம் முழுவதும் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மருந்து கண்டுபிடிக்கும் பணியில், உலக நாடுகள் தீவிரமாக களமிறங்கியுள்ளது.
இந்நிலையில், பிரேசிலிலிருந்து, சீனாவின் வுகாண் மாகாணத்தில் இறக்குமதி செய்யப்பட்ட உறைந்த உணவு பேக்கேஜை பரிசோதனை செய்ததில், இறக்குமதி செய்யப்பட்ட பன்றி இறைச்சி மற்றும் மாட்டிறைச்சி பாக்கேஜில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக, சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, இறக்குமதி செய்யப்பட்ட உறைந்த பொருட்களை சீல் வைக்கவும், கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யவும் உள்ளூர் அதிகாரிகள் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.