சிங்கப்பூர் சிறையில் சமையல் செய்பவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, 5,000 கைதிகளுக்கு கொரோனா பரிசோதனை.
சிங்கப்பூரில் உள்ள சாங்கி சிறைசாலையிலுள்ள A5ல் அமைந்துள்ள சிறை சமையலறையில் பணிபுரியும் 39 வயதான ஒப்பந்த ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே, காய்ச்சல் மற்றும் மூக்கு ஒழுகுதல் போன்ற பிரச்சினைகள் இருந்துள்ளது.
அவருக்கு பரிசோதனை செய்வதில் கொரோனா தொற்று உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு உள்ள கைதிகள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோன பரிசோதனை செய்யப்பட உள்ளதாக சிறை துறை தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கைதிகள், சிறைச்சாலையில் மற்ற கைதிகளிடம் இருந்து தனிமைப்படுத்தப்படுவர்.
இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சமையல்காரர் பணிபுரிந்த A5 பகுதியில், குடும்ப வருகைகள், ஆலோசனை அமர்வுகள் நிறுத்தப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் 61 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 31 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : ஆசியக் கோப்பையில் இருந்து இந்தியா விலகுவதாக வெளியான செய்திகளை பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சைகியா திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். அடுத்த…
டெல்லி : பஹல்காமில் நமது மகள்களின் நெற்றிக் குங்குமத்தை அழித்தவர்களுக்கு, அவர்களின் சொந்த சகோதரியைக் கொண்டே பாடம் கற்பித்துள்ளோம் என…
சென்னை : மத்திய கிழக்கு அரபிக் கடலில் வரும் 22ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.…
தூத்துக்குடி மாவட்டத்தில், காருக்குள் கருகிய நிலையில் ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு…
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி…
சென்னை : நடிகர் விஷால் எதாவது நிகழ்ச்சிக்கு சென்றாலே அவரிடம் அடுத்த என படம் நடிக்கிறீர்கள் என்று கேட்பதை விட உங்களுக்கு…