வாணி ராணி சீரியலில் நடிக்கும் நவ்யா சுவாமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் குணமடைந்து வீடும் திரும்பியுள்ளனர்.மேலும் சிலரது உயிரையும் கொரோனா பறித்துள்ளது .அதில் சினிமா பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் அடங்கும்.சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் தற்போது பிரபல சீரியல் நடிகை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழில் வாணி ராணி, அரண்மனை கிளி உள்ளிட்ட பல சீரியல்களிலும், தெலுங்கிலும் பல சீரியல்களில் நடித்து வருபவர் நவ்யா சுவாமி. சமீபத்தில் இவர் தெலுங்கு சீரியல் ஒன்றிற்காக படப்பிடிப்பிற்கு சென்ற போது உடல்நல குறைவு ஏற்ப்பட்டதை அடுத்து கொரோனா தொற்றுக்கான பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உடனடியாக அவர் படப்பிடிப்பிற்கு செல்வதை நிறுத்தி விட்டு தன்னை தானே தனிமைப்படுத்தி கொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது. இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்த அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா தொற்றுக்கான பரிசோதனை செய்யப்பட்டது மட்டுமில்லாமல் தனிமைப்படுத்தி கொள்ளவும் அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…