அமெரிக்காவில் நீர்நாய்களுக்கு கொரோனா தொற்று உறுதி…!

அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில், அட்லாண்டா நகரில் அமைந்துள்ள நீர்வாழ் உயிரின காட்சி கூடத்தில், நீர்நாய்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஓராண்டிற்கு மேலாக கொரோனா வைரஸ் ஆனது உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இந்த வைரசை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டு அரசும் மிகத் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. தற்போது தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து நாடுகளிலும் தடுப்பூசிகளும் போடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில், அட்லாண்டா நகரில் அமைந்துள்ள நீர்வாழ் உயிரின காட்சி கூடத்தில், நீர்நாய்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நீர் நாய்களில் சிலவற்றிற்கு சளி, தும்மல் போன்ற அறிகுறிகள் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், தற்போது அனைத்து நீர்நாய்களும் பூரண நலத்துடன் இருப்பதாகவும், விரைவில் பாதிக்கப்பட்ட அனைத்தும் நலம் பெற்று பாதிப்பிலிருந்து மீண்டு வரும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025