நடிகர் அதர்வாவிற்கு கொரோனா தொற்று உறுதி..!!
நடிகர் அதர்வா முரளிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
நாடு முழுவதும் கொரொனோ 2வது அலையின் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் விழிப்புடன் செயல்படுமாறும், கொரோனா விதிமுறைகளை கையாளுமாறும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் காரணமாக அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என பலர் பாதிக்கப்பட்டு குணமடைந்து வருகின்றனர்.
அந்த வகையில் தமிழ் திரைப்பட நடிகர் அதர்வா முரளிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதியானதை தொடர்ந்து தன்னைத்தானே வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்.
இதனை அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியது ” கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. நான் தற்போது என்னை வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி வருகிறேன். விரைவில் குணமாகி பணிகளை தொடர்வேன் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
— Atharvaa (@Atharvaamurali) April 17, 2021