பாகிஸ்தானில் 380 பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!

Published by
Rebekal

பாகிஸ்தானில் 380 பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதிலும் தீவிரம் அடைந்து கொண்டே செல்லும் கொரானா வைரஸ் தாக்கம் தற்போது பாகிஸ்தானில் தனது வீரியத்தை காட்டி வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் உள்ள 64 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கடந்த செப்டம்பர் 12ம் தேதியிலிருந்து அக்டோபர் 2ஆம் தேதி வரைக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 380 ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து வெளியாகியுள்ள அறிக்கையில் 29 மாவட்டங்களில் உள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும் அவ்வாறு பரிசோதனை மேற்கொள்ளத  46 அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் சமூக இடைவெளிகளை கடைபிடிக்காமல் பள்ளிகள் நடத்தப்படுவதாக 800க்கும் மேற்பட்ட பள்ளிகள் மீதும் கண்டனம் எழுந்துள்ளது. மேலும் 1,039 பள்ளிகளில் கை கழுவும் வசதிகள் இல்லை எனவும், 807 பள்ளிகளில் வகுப்பறைகள் கிருமி நீக்கம் செய்யப்படவில்லை எனவும், 1,204 பள்ளிகளில் சுத்தமான கழிப்பறைகள் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

நெல்லையில் பயங்கரம்: நீதிமன்ற வாசலில் இளைஞர் வெட்டிக்கொலை!

நெல்லையில் பயங்கரம்: நீதிமன்ற வாசலில் இளைஞர் வெட்டிக்கொலை!

திருநெல்வேலி: நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகம் முன்பு, வழக்கு விசாரணைக்கு வந்த இளைஞர் ஒருவரை 4 பேர் கொண்ட கும்பல்…

19 minutes ago

எப்போது உருவாகிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்? வானிலை ஆய்வு மையம் சொல்வதென்ன?

சென்னை: மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற…

42 minutes ago

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க நெல்லிக்காய் குல்கந்து செய்வது எப்படி?.

சென்னை :நெல்லிக்காய் குல்கந்து தித்திக்கும் சுவையில் செய்வது எப்படி என இந்த செய்தி  குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; நெல்லிக்காய்…

46 minutes ago

தொடர்ந்து சரியும் தங்கம் விலை… இன்று சவரனுக்கு ரூ.240 குறைவு!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. சொல்லப்போனால், கடந்த மூன்று…

1 hour ago

சென்னை: பாதியில் நிறுத்தப்பட்ட ரயில்கள் – பயணிகள் தவிப்பு.!

சென்னை: சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில்கள் திடீரென எண்ணூரில் நிறுத்தப்பட்டது. இதனால், சென்னை - கும்மிடிப்பூண்டி மார்க்கத்தின் ரயில்…

1 hour ago

தமிழகத்தில் சனிக்கிழமை (21/12/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி, மேட்டுப்பாளையம் சாலை, சர்க்யூட் ஹவுஸ், விமானப்படை, சுக்ரவார்பேட்டை, மரக்கடை, ராம்நகர்,…

2 hours ago