உலகளவில் இதுவரை இல்லாத அளவாக, கடந்த 100 மணிநேரத்தில் மட்டும் 10 லட்ச பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவில் பரவதொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதுவரை 1.44 கோடி பேர் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், இதுவரை 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த, தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் பல உலகாடுகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில், உலகளவில் இதுவரை இல்லாத அளவாக, கடந்த 100 மணிநேரத்தில் மட்டும் 1 மில்லியன் (10 லட்சம்) பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
மேலும், கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நாளில் இருந்து 3 மாதங்களுக்கு பிறகுதான் 10 லட்சம் பாதிப்புகளை எட்டுவதற்கு கிட்டத்தட்ட 3 மாதங்கள் ஆனதாகவும், 100 மணிநேரத்தில் 1 மில்லியன் தொற்று இதுவே முதல்முறை என சுகாதாரத்துறை அதிகாரிகளும், மருத்துவர்களும் தெரிவித்துள்ளனர்.
தற்பொழுது உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.4 கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது ஜூலை 13 ஆம் தேதி 1.3 கோடியாக இருந்த இந்த கொரோனா பாதிப்பு, தற்பொழுது வெறும் 100 மணிநேரத்தில் (ஏறத்தாழ 4 நாட்கள்) 10 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதில் அதிகபட்சமாக, அமெரிக்காவில் மட்டும் 77 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனைதொடர்ந்து, பிரேசிலில் 26 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும் இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 37 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியானது குறிப்பிடத்தக்கது.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…