நாகலாந்தில் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும்.
உலக முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டு அரசும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், நாகலாந்தில், கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக பொது இடங்களில், முக கவசம் அணிவதை கட்டாயமாக்கியுள்ளனர்.
இதனையடுத்து, முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.100அபராதம் விதிக்கவும், கைகழுவ வசதி ஏற்படுத்தாத நிறுவனங்களுக்கு, ரூ.500 அபராதமும் விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநில அரசு தலைமை செயலாளர் ஜெ.ஆலம் விடுத்துள்ள அறிக்கையில், ‘பொது இடங்களில் முக கவசங்களை அணிவது, நிறுவனங்கள் கை கழுவும் வசதி வழங்குவது, தனிமனித இடைவெளியை பின்பற்றுவது என்று நாகலாந்து பேரிடர் மேலாண்மை ஆணையம் விதிமுறைகளை விதித்துள்ளது. இதை செய்ய தவறியவர்களுக்கு மட்டுமல்ல, அவர்களை சுற்றிலும் உள்ள மற்றவர்களுக்கும் கொரோனா பரவும் கடுமையான ஆபத்தை ஏற்படுத்துகிறது.’ என தெரிவித்துள்ளார்.
சென்னை : அமெரிக்காவின் 47வது அதிபரை தேர்வு செய்யும் தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கி, வெற்றி…
சவுதி : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு என்பது இருந்து வந்தது. இந்த நிலையில்,…
சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
சென்னை : தெலுங்கர்கள் அந்தப்புரத்து சேவகர்கள் என்ற நடிகை கஸ்தூரியின் சர்ச்சைப் பேச்சு தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.…
நாகப்பட்டினம் : நாகை மற்றும் திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு நாளை (நவ.06] உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்கல் சிங்காரவேலர்…
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று வருகை தந்த போது, துணை…