பாகிஸ்தானிலும் அதிகரித்து வரும் கொரோனா தாக்கம்.! 2 நாளில் 450க்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் பாதிப்பு.!

கொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனால் உலகில் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு தீவிரமாக பின்பற்றப்பட்டு வருகிறது. உலகம் முழுக்க கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 70 ஆயிரத்தை நெருங்கி கொண்டிருக்கிறது.
இந்தியாவை போல அண்டை நாடான பாகிஸ்தானிலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. 2 நாளில் மட்டுமே 450க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனை அடுத்து, தற்போது பாகிஸ்தானில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,277 ஆக உள்ளது. கொரோனாவிற்கு பலியானோர் எண்ணிக்கை 50ஆக உயர்ந்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
விஜய் தம்பி ஜி இப்படி பேசாதீங்க! தமிழிசை சௌந்தரராஜன் பதிலடி!
March 31, 2025