சீனாவில் தலைதூக்கும் கொரோனா.! பள்ளி, விமானங்கள் ரத்து.!
முதல் முறையாக சீனாவில் உள்ள உகான் நகரில் கொரோனா கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அங்கு வேகமாக பரவிய நிலையில் அது கட்டுப்படுத்தப்பட்டது. இந்நிலையில், சீனாவில் கடந்த சில நாள்களாக கொரோனா உறுதி செய்யப்பட்டு வருகிறது.
இதையடுத்து, தலைநகர் பிஜிங்கில் உள்ள மொத்த விற்பனை அங்காடியில் கொரோனா பரவியது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், சந்தையில் இருந்த எட்டாயிரம் தொழிலாளர்களுக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.
கடந்த 6 நாட்களில் மட்டும் 137 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் பீஜிங்கில் புதிதாக 31 பேருக்கு கொரோனாவால் பாதிக்கப்ட்டுள்ளனர். இதனால், மக்கள் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது.
மேலும், பீஜிங்கில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. 1255 விமானங்களையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.