அமெரிக்காவில் ஒரே நாளில் 32,165 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டு, ஒரே நாளில் 2,535 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
சீனா உஹான் மாகாணத்தில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் அந்நாட்டை விட்டு தற்போது விலகியுள்ளது. ஆனால் அங்கு ஆரம்பித்த வைரஸ் இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளில் வேகமாக பரவி உயிர்களை கொன்று குவித்து வருகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பாதிப்பும், உயிரிழப்பும் உலகளவில் பெரும் உச்சத்தை தொட்டுள்ளது. உலக முழுவதும் இதுவரை கொரோனாவால் 22,50,790 பேர் பாதிக்கப்பட்டு, 1,54,266 பேரை கொன்றுள்ளது. இதில் அமெரிக்காவில் தான் அதிகப்படியாக தாக்கியுள்ளது.
அமெரிக்காவில் வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் அதிபர் ட்ரம்ப். ஆனால் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். இதனால் உயிரிழப்பு மற்றும் பாதிப்பு தினந்தோறும் பலமடங்கு அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் ஒரே நாளில் 32,165 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 7,10,021 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து ஒரே நாளில் 2,535 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்ததால் அங்கு பலி எண்ணிக்கை 37,158 ஆக அதிகரித்துள்ளது.
சென்னை : வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம், இறுகப்பற்று ஆகிய திரைப்படங்க்ளில் நடித்து தமிழ் சினிமாவில் நல்ல…
சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…
"எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!" நயினார் நாகேந்திரன் பேச்சு! சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில்…
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…