உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு!

உலகம் முழுவதும் 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
உலகம் முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து கொண்டே செல்லும் நிலையில், தற்பொழுது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மட்டும் 5,194,210 ஆக அதிகரித்து கொண்டே செல்கிறது.
உலகம் முழுவதும் 334,621 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மேலும், பாதிக்கப்பட்டவர்களில் 2,081,509 பேர் குணமாகி வீடு திரும்பியும் உள்ளனர். நேற்று ஒரே நாளில் 107,085 பேர் கொரோனாவுக்கு புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரே நாளில் 4,934 பேர் புதிதாக இறந்துள்ளனர். தற்பொழுது மருத்துவனையில் 2,777,306 பேர் பெற்று வருகின்றனர். அவர்களில் 45,620 பேர் மிகவும் மோசமான சூழ்நிலையிலும் உள்ளனராம்.