உலகளவில் 15ஆயிர உயிர்களை காவுவாங்கிய கொரோனா!

சீனா, வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட புதியவகை வைரஸான கொரோனா வைரஸ், அந்நாட்டை வாட்டிவதைக்தது. இதனால் சீனாவில் நாளுக்கு நாள் உயிரிழப்புகள் வந்தது. மேலும், உலகளவில் இந்த வைரஸின் தாக்கம் அசுரவேகத்தில் பரவிவருவதால், உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.
இந்நிலையில், உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15,297 ஆக உயர்ந்துள்ளது. மேலும், உலகளவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 318,211ஆக உயர்வு. இதனால் உலகநாடுகள் கொரோனா பரவாமல் இருக்க பல நாடுகள் பல கட்டுப்பாடுகளை விடுத்துள்ளது.