ராகவா லாரன்ஸ் டிரஸ்ட்டில் உள்ளவர்களுக்கு கொரோனா.! அவரே அளித்த விளக்கம்.!
ராகவா லாரன்ஸ் நடத்தும் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் உள்ளவர்களுக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதை குறித்து விளக்கமளித்துள்ளார் .
ராகவா லாரன்ஸ், கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அச்சுறுத்தி வந்த நாள் முதல் பலருக்கும் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகமாக நிதியுதவி வழங்கியவர் ராகவா லாரன்ஸ் என்பது அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் தாய் என்ற அமைப்பின் மூலம் பலருக்கு ஏழை எளிய மக்களுக்கு உதவுகிறார். இதற்காக பலர் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் அசோக் நகரில் இவர் நடத்தி வரும் டிரஸ்ட்டில் உள்ளவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் சில தகவல்கள் வெளியாகியிருந்தது.
தற்போது ராகவா லாரன்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது நான் செய்யும் சேவைகள் எனது குழந்தைகளை காக்கும் என்று நம்புகிறேன் அமைச்சரான வேலுமணி அவர்களுக்கு எனது நன்றிகள். நான் ஆதரவற்ற குழந்தைகளுக்காக ஒரு டிரஸ்ட் நடத்துவதை நீங்கள் அறிவீர்கள். ஒரு வாரத்திற்கு முன்னர், அங்குள்ள சில குழந்தைகளுக்கு காய்ச்சலுக்கான அறிகுறி தென்பட்டது. அதனையடுத்து பரிசோதனையில் 18 குழந்தைகளுக்கும், 3 ஊழியர்கள் மற்றும் 2 மாற்று திறனாளி பணியாளர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இது எனக்கு மிகவும் வருத்தத்தை கொடுத்தது. அதனையடுத்து மருத்துவர்களிடம் பேசிய போது, குழந்தைகளின் உடல்நலத்தில் முன்னேற்றம் உள்ளதாகவும், அவர்கள் நலமுடன் இருப்பதாகவும், காய்ச்சல் குறைந்து டெம்பரேச்சர் சீராக இருப்பதாகவும் கூறினார். வைரஸ் நெகட்டிவானதும் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் என்று கூறினார். இந்த சூழலில் உடனடியாக உதவி செய்த அமைச்சர் எஸ். பி. வேலுமணி அவர்களுக்கு நன்றி என்று கூறியுள்ளார். மேலும் சுகாதார துறை அமைச்சரான விஜயபாஸ்கர் பி. ஏ. ரவி சார் மற்றும் மாநகராட்சி ஆணையர் கோ. பிரகாஷ் குமார் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்த சேவை எனது குழந்தைகளை காக்கும் என நம்புகிறேன். குழந்தைகள் அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்யுங்கள் என்று கூறியுள்ளார்.
I Hope the service I do will save my kids.
My thanks to Thiru.S.P Velumani, honourable minister of local administration @SPVelumanicbe pic.twitter.com/fRXU7uw5kb— Raghava Lawrence (@offl_Lawrence) May 28, 2020