சீனாவில் புதியதாக 5,280 பேருக்கு கொரோனா: 10 நகரங்களில் ஊரடங்கு..!

Published by
murugan

சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. சீனாவின் பல நகரங்களில் கொரோனா வைரஸ் மீண்டும் வேகமாக பரவி வருகிறது. சீனாவில் புதியதாக 5,280 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சீனாவின்  சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு காரணமாக பல நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சில நகரங்களில் பள்ளிகள் மூடப்பட்டன. கொரோனா நோய்த்தொற்று பரவுவதைத் தடுக்க, மக்கள் தங்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். மேலும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

சீனாவில் கொரோனா வேகமாக அதிகரித்து வருகிறது:

இன்று உலகம் முழுவதும் 13 லட்சத்திற்கும் அதிகமனோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  3,579 பேர் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில், சீனாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சுமார் 3300 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த ஒரு நாளில் சீனாவில் புதியதாக 5,280 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், சீனாவின் ஷென்சென், ஜிலின் உள்ளிட்ட 10  நகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தொற்று பரவுவதைத் தடுக்க ஷாங்காயில் பள்ளிகள் ஏற்கனவே மூடப்பட்டுள்ளன. சீனாவின் தேசிய சுகாதார ஆணையத்தின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 1,337 புதிய கொரோனா தொற்று Omicron வைரஸால் பாதிக்கப்ட்டுள்ளனர். இவற்றில் தொழில்துறை மாகாணமான ஜிலினில் மட்டும் 895 பேர் பாதிக்கப்ட்டுள்ளனர்..

WHO எச்சரிக்கை:

கடந்த ஒரு வாரத்தில் பெய்ஜிங், ஷாங்காய் உள்ளிட்ட ஷென்சென், ஜியாங்சு, ஷான்டாங் மற்றும் ஜெஜியாங் மாகாணங்களில் புதியதாக அதிகமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது சீனாவின் பொருளாதாரத்தை மீண்டும் ஒருமுறை கடுமையாக பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம், WHO விஞ்ஞானி மரியா வான் கார்கோவ் கூறுகையில், ஓமிக்ரான் மற்றும் டெல்டாவின் கலவையானது உலகில் ஒரு புதிய மாறுபாட்டை உருவாக்கக்கூடும், இது தொற்றுநோயின் நான்காவது அலையைக் கொண்டு வரக்கூடும் என்று கூறினார்.

கொரோனா வைரஸ் முதலில் சீனாவின் வுஹானில் கண்டறியப்பட்டது.  சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் காரணமாக, இந்த நோய் குறித்த கவலை உலகளவில் மீண்டும் அதிகரித்துள்ளது.

Recent Posts

“விஜயகாந்த்துக்கு மரியாதை செலுத்தும் கிரிக்கெட் படம்” லப்பர் பந்து இயக்குநர்.!

“விஜயகாந்த்துக்கு மரியாதை செலுத்தும் கிரிக்கெட் படம்” லப்பர் பந்து இயக்குநர்.!

சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…

25 mins ago

லட்டு விவகாரம் : “இதை வைத்து மத அரசியல் செய்கின்றனர்”! ஜெகன் மோகன் ரெட்டி பரபரப்பு பேட்டி !

ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…

38 mins ago

பிரியங்கா – மணிமேகலை விவகாரம் : விதிகளை மீறியதால் வழக்கு தொடர போகும் விஜய் டிவி?

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…

49 mins ago

“ரூ.320க்கு எப்படி சுத்தமான பசு நெய் கிடைக்கும்.? ” புலம்பும் திருப்பதி தேவஸ்தானம்.!

ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…

56 mins ago

அசத்தலான சுவையில் பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி.?

சென்னை -சத்தான பாசிப்பயிறு  லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…

1 hour ago

விஸ்வரூபமாகும் திருப்பதி லட்டு சர்ச்சை.! சந்திரபாபு நாயுடு vs ஜெகன் மோகன் ரெட்டி.!

ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…

2 hours ago