#BREAKING: 26 பயணிகளுக்கு கொரோனா.! பாகிஸ்தானுக்கு சேவையை நிறுத்திய எமிரேட்ஸ்.!
எமிரேட்ஸ் விமான நிறுவனம் பாகிஸ்தானில் இருந்து பயணிகள் சேவை விமானத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்த்துள்ளது.
இது குறித்து அந்நிறுவனம் கூறுகையில், எங்கள் விமானங்களில் ஹாங்காங்கிற்கு பயணம் செய்த 26 பயணிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடந்து இன்று முதல் பாகிஸ்தானில் இருந்து பயணிகள் சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க எமிரேட்ஸ் முடிவு எடுத்துள்ளது. மேலும், பாகிஸ்தானுக்கு சரக்கு விமானங்கள் தொடரும் எனவும் அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் 20-ம் தேதி அன்று ஹாங்காங்கிற்கு எமிரேட்ஸ் விமானத்தில் பயணம் செய்த 26 பயணிகள் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இந்த பயணிகள் பாகிஸ்தானில் இருந்து பயணம் செய்து துபாய் விமான நிலையம் வழியாக சென்று பின்னர் இரண்டாவது எமிரேட்ஸ் விமானத்தில் ஹாங்காங்கிற்கு சென்றுள்ளனர்.
கடந்த சில வாரங்களாக பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுவரை 188,926 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.