அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட 10 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டதை தொடர்ந்து படப்பிடிப்பை நிறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வரும் திரைப்படம் “புஷ்பா”. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தானா நடிக்கவுள்ளார்.செம்மரக்கடத்தல் விவகாரத்தை அடிப்படையாக கொண்டு உருவாகும் இந்த படத்தில் மரத்தை வெட்டுபவராக அல்லு அர்ஜுன் நடிப்பதாக கூறப்படுகிறது.
புஷ்பா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அல்லு அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானதும்,கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டிருந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள மரேடுமிலி காடுகளில் நடைபெற்று வந்தது .
கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றி நடைபெற்று வந்த படப்பிடிப்பில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.இந்த நிலையில் தற்போது புஷ்பா படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனவே உடனடியாக புஷ்பா படக்குழுவினர் படத்தின் படப்பிடிப்பை நிறுத்தி உள்ளதாகவும் ,அல்லு அர்ஜுன் ஆந்திராவில் இருந்து ஹைதராபாத்திற்கு திரும்பியதாகவும் கூறப்படுகிறது.
மலேசியா : பிசிசிஐ 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றுள்ளது. மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள பியூமாஸ்…
சென்னை : நடிகை சமந்தா கடந்த சில நாட்களாக இயக்குனருடன் டேட்டிங் செய்து வருகிறார் என்று கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இப்போது…
மலேசியா : மலேசியாவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.…
மலேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியின் அபாரமான பந்து…
மும்பை : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது (கடைசி) டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று…
சென்னை : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி புதன்கிழமை அன்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.…