கொரோனா எதிரொலி: சீனாவில் அனைத்து கிளைகளை மூடிய ஆப்பிள் நிறுவனம்.!

Default Image
  • சீனாவில் கொரோனா வைரசால் பலியானவர்களின் எண்ணிக்கை 259 ஆக உயர்ந்துள்ளது.
  • சீனாவில் உள்ள ஆப்பிள் நிறுவனத்தின அலுவலகங்கள், தொடர்பு மையங்கள், ஸ்டோர்ஸ் ஆகியவற்றை மூட அந்நிறுவனம் முடிவு செய்து உள்ளது.

சீனாவில் தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலால் தினமும் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இதுவரை சீனாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 259 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல இந்த வைரசால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

 20 நாடு கொரோனா வைரஸ்:

சீனாவில் இருந்து சொந்த நாடுகளுக்கு திரும்பிய போது கொரோனா வைரஸ் ஜப்பான், தென்கொரியா, தாய்லாந்து, அமெரிக்கா, தைவான், ஆஸ்திரேலியா, பிரான்சு மற்றும் இந்தியா போன்ற 20 நாடுகளுக்கு பரவி உள்ளது.

ஆப்பிள் நிறுவனம் மூட முடிவு:

இந்நிலையில் சீனாவில் உள்ள ஆப்பிள் நிறுவனத்தின அலுவலகங்கள், தொடர்பு மையங்கள், ஸ்டோர்ஸ் ஆகியவற்றை மூட அந்நிறுவனம் முடிவு செய்து உள்ளது.வருகின்ற பிப்ரவரி 9-ம் தேதி வரை தங்கள் நிறுவனத்தின் மையங்கள், ஸ்டோர்ஸ் மூடப்படும் என ஆப்பிள் நிறுவனம்  அறிவித்துள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்