உலக நாடுகளில் கோரத் தாண்டவம் ஆடி வரும் கொரோனா வைரஸால் இதுவரை உலகளவில் 5,000க்கும் மேற்பட்டோர் பலியாகி, 1,00,000க்கும் அதிகமானோர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இதனால் உலக சுகாதார அமைப்பு உலகளாவிய தொற்று நோய் கொரோனா என்று அறிவித்தது. இதன் விளைவு காரணமாக உலக நாடுகள் அனைத்தும் வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பொது இடங்களில் கூட்டமாக கூட கூடாது என்று பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்த நிலையில் பிரான்சில் கொரோனா அச்சம் காரணமாக புகழ்பெற்ற சுற்றுலா தளமான இருக்கும் ஈபிள் டவரை பார்வையிட முற்றிலும் தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. பிரான்சில் கொரோனவால் இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 3,000க்கும் மேலானோர் பாதிப்பு அடைந்துள்ளனர். முன்னெச்சரிக்கையாக ஓரிடத்தில் அதிகமாக மக்கள் கூடுவது தவிர்க்க வேண்டும் என்று ஏற்கனவே அங்கு தடை விதித்துள்ளது. இதேபோல் பாரிஸில் உள்ள மியூசியம் உள்ளிட்ட சுற்றுலா தளங்களும் மூடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…
சென்னை : பலரும் பார்த்து ரசித்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்களுடைய…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ…