பிரிட்டனில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட 400-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழப்பு!
பிரிட்டனில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட 492 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸானது, தொடர்ந்து பல நாடுகளை தாக்கி வருகிறது. இதனால், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் நோயானது, இந்தியாவிலும் பல்லாயிரக்கணக்கானோரை பாதித்துள்ளது.
இந்நிலையில், இந்தியர்கள் பலர் வெளிநாடுகளில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். வெளிநாடுகளில் பரவி வந்த அந்த கொரோனா வைரஸ் அங்குள்ள இந்தியர்களையும் தாக்கி உள்ளது. இந்தியாவை பூர்விகமாக கொண்ட பலர் பிரிட்டனில் உள்ளனர்.
பிரிட்டனில், கொரோனா வைரஸால் இதுவரை 492 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பிரிட்டனில் கொரோனா வைரஸால், 1,38,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 18,000 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 3% பேர் இந்தியாவை பூர்விகமாக கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.