அமெரிக்காவில் 35 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பலி எண்ணிக்கை! 2.2 கோடி பேர் வேலையிழப்பு!
உலகம் முழுவதும் இந்த கொரோனா வைரஸ் பரவி வருகிற நிலையில், உலக அனைத்தும் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். முதலில் சீனாவில் பரவிய இந்த கொரோனா வைரஸானது, தொடர்ந்து 200-க்கும் மேற்பட்ட நாடுகளை தாக்கியுள்ளது.
இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையிலும், பலியானோர் எணிக்கையிலும் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில், அமெரிக்காவில் 35 ஆயிரம் பேர் இந்த நோயால் பலியாகியுள்ள நிலையில், கடந்த வாரம் 52 லட்சம் அமெரிக்கர்கள் வேலைக்காக விண்ணப்பித்து உள்ளதாக அமெரிக்க அரசு அறிவித்து இருந்தது. தற்போது அது 2.2 கோடியாக அதிகரித்து உள்ளது. இது அன்நாட்டின் பெரும்பகுதியான மக்களின் வேலையிழப்பை காட்டுகிறது.