அமொரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 250,029-ஆக உயர்ந்துள்ளதை அடுத்து நியூயார்க் அரசாங்கம் அங்குள்ள 1,800 பள்ளிகளை மூட உத்தரவிட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை,அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கால் மில்லியனையும் கடந்து விட்டதாக கூறப்படுகிறது . ஜான்சஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் கூற்றுப்படி, அமொரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 250,029-ஆக உள்ளது என்று கூறியுள்ளது .
எனவே அமெரிக்காவில் உள்ள மாநிலங்கள் மற்றும் நகரங்களுக்கு புதிய கட்டுபாடுகளை விதித்துள்ளது.அதன்படி வீட்டை விட்டு வெளியே செல்லாமல் இருப்பது, பொது கூட்டங்களுக்கு தடை,உட்புற சாப்பாட்டை முடுவது உள்ளிட்ட கட்டுபாடுகளை விதித்துள்ளது.
மேலும் நியூயார்க்கில் மூன்று நாட்களில் கொரோனா பாதிப்பு மூன்று சதவீதமாக அதிகரித்ததால் வியாழக்கிழமை முதல் 1,800 பள்ளிகளை மூடுவதாகவும் , மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு நடைபெறும் என்றும் நியூயார்க் மேயர் தெரிவித்துள்ளார்.
மேலும் உலக சுகாதார அமைப்பின் கருத்துப்படி,கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஐரோப்பா உள்ளதாகவும், அங்கு கடந்த வாரம் 49% இறப்புகள் பதிவாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் கடந்த வாரம் தென்கிழக்கு ஆசியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று ஐரோப்பாவில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடான சுவிட்சர்லாந்தில் தீவிர சிகிச்சை பிரிவுகள் அனைத்தும் நிரம்பியுள்ளதாகவும், படுக்கைகள் மேலும் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் , கொரோனா பரவுவதை தடுப்பதற்காக சுவிஸ் ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. மேலும் ஹங்கேரியில் அவசரகால நிலை பிப்ரவரி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.மேலும் ஈரானிய ஜனாதிபதி, சனிக்கிழமை முதல் தனது நாட்டின் பல பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க போவதாக தெரிவித்திருந்தார் .
தென் ஆஸ்திரேலியா பள்ளிகள், கடைகள், விடுதிகள், தொழிற்சாலைகள், மற்றும் உணவுகளை மூட கோரி புதன்கிழமை அன்று பூட்டுதலை அறிவித்தது.
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…
மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…