அமெரிக்காவில் மீண்டும் ஆயிரத்தை தாண்டும் கொரோனா பலி எண்ணிக்கை.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து, பல நாடுகளை தாக்கி வருகிறது. இந்த வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த உலக நாடுகள், இந்த வைரஸை அழிப்பதற்கான மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது.
இந்த வைரஸ் தாக்கத்தால், இதுவரை உலக அளவில், 6,485,571 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 382,412 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ள நாடுகளில், அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
இதுவரை அமெரிக்காவில் இந்த வைரஸ் தாக்கத்தால், 1,881,205 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 108,059 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், நேற்று மட்டும் அமெரிக்காவில் இந்த வைரஸ் தாக்கத்தால், 1,134 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களாக அங்கு பலி எண்ணிக்கை குறைவாக இருந்த நிலையில், தற்போது மீண்டும் பலி எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது, அந்நாட்டு மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை : சினிமாவை பொறுத்தவரையில் நடிகர்களுக்குள் போட்டிகள் இருந்தாலும் அது ஆரோக்கியமான போட்டியாகத் தான் இருக்கும். அந்த போட்டியை சினிமாவை…
சென்னை : இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலினிடம் அதானியுடன் தமிழக முதலவர் சந்திப்பு நிகழ்ந்ததா என்பது குறித்து விளக்கம்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்காக நடைபெற்று வரும் மெகா ஏலத்தின் இரண்டாம் நாள் இன்று தொடங்கியுள்ளது. இந்த ஏலத்தில் தொடக்கமே…
இந்நிலையில், வரவிருக்கும் நாட்களில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது? காற்றழுத்த தாழ்வின் நிலை என்ன என்பது குறித்து வானிலை…
சென்னை : சர்வதேச அளவில், இன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் பல…
சென்னை :சட்டுனு ஒரு சைடு டிஷ் வேணுமா?. அப்போ இந்த புளி மிளகாய் ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க.. தேவையான…