வைரஸ் தாக்கத்தால் நேற்று மட்டும், அமெரிக்காவில், 2,528 பேர் உயிரிழந்துள்ளனர்.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து, 200-க்கும் மேற்பட்ட நாடுகளை தாக்கியுள்ளது. இந்த வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த வைரஸை அழிக்க உலகநாடுகள் தீவிரமாக மருந்து கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், இதுவரை இதற்கான மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்நிலையில், இந்த கொரோனா வைரஸால் உலக அளவில் இதுவரை 3,822,860 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 265,076 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த வகையில், உலக அளவில் இந்த வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையிலும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையிலும் முதலிடத்தில் இருப்பது வல்லரசு நாடான அமெரிக்கா தான்.
இந்நிலையில், அமெரிக்காவில் இதுவரை 1,263,092 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 74,799 பேர் இந்த வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் தாக்கத்திற்கு நேற்று மட்டும், அமெரிக்காவில், 2,528 பேர் உயிரிழந்துள்ளனர். நாளுக்குநாள் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை, அங்குள்ள மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…
சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய…
ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…
சென்னை -சபரி மலை ஐயப்பனுக்கு மாலை அணிந்த பின் என்ன செய்யலாம்.. செய்ய கூடாது என்பதை இந்த செய்தி குறிப்பில்…
கோவை : பட்டணம் , பட்டணம் புதூர் , கம்பன் நகர் , நொயல் நகர் , சத்தியநாராயண புரம்…