அமெரிக்காவை அதிர வைக்கும் கொரோனா பாதிப்பு! 2,300-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

அமெரிக்காவில் கொரோனா வைரஸால் நாளுக்கு நாள் 2,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர்.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸானது, அங்கு பல்லாயிரக்கணக்கான உயிர்களை கொன்று குவித்த நிலையில், தற்போது இந்த வைரஸ் நோய் மற்ற நாடுகளிலும் தீவிரமாக பரவி வருகிறது.
இந்நிலையில், இந்த வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையிலும், பலியானோரின் எண்ணிக்கையிலும் முதலிடத்தில் அமெரிக்கா உள்ளது.
இந்த வைரஸ் நோயினால், நாளுக்குநாள் அமெரிக்காவில் ஆயிரக்கணக்கானோர் செத்து மடிந்த நிலையில், நேற்று மட்டும் இந்த நோயினால், அமெரிக்காவில், 2,342 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 886,442 பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
குஜராத்தை கதறவிட்ட 14 வயது சிறுவன்…ராஜஸ்தான் த்ரில் வெற்றி!
April 28, 2025