அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை!

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளதால், இந்த வைரஸை அழிப்பதற்கு, உலக நாடுகள் மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரஸால் இதுவரை உலக அளவில், 7,452,809 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 418,919 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ள நிலையில், இதுவரை இந்த வைரஸ் பாதிப்பால் அங்கு, 2,066,401 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 115,130 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இந்த கொரோனா பாதிப்பால் நேற்று மட்டும் அமெரிக்காவில், 982 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 20,852 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.