உலகளவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு!
உலகளவில் கொரோனாவின் பாதிப்பு கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 220,073 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இதுவரையில் உலகம் முழுவதும் 14,634,732 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 608,559 பேர் உயிரிழந்துள்ளனர், 8,730,163 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரசால் புதிதாக 220,073 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 4,316 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த நாட்களை கணக்கிடுகையில் உயிரிழப்பு குறைந்து தான் உள்ளது.