கொரோனா ஊரடங்கால் உலகளவில் 50% வரை குறைந்த ஒலி இரைச்சல்!
கொரோனா வைரஸ் ஊரடங்கால் உலகம் முழுவதுமான ஒலி இரைச்சல் அதிர்வெண் 50% க்கும் மேல் குறைந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
உலகம் முழுவதிலும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்வதால், கடந்த 4 மாதங்களுக்கு மேல் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது, அனாவசியமாக யாரும் வெளியில் நடமாடக்கூடாது என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், மக்கள் நடமாட்டம் குறைந்து தொழிற்சாலைகள் எல்லாம் மூடப்பட்டுள்ளதால், ஒலி இரைச்சல் மற்றும் நில மாசுபாடுகள் குறைந்துள்ளது. லண்டனின் இம்பீரியல் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் மற்றும் உலகின் பல ஆராய்ச்சியாளர்கள் இணைந்து கொரோனா காலகட்டத்தில் ஒலியின் இரைச்சல் அதிர்வெண்ணின் தாக்கத்தை ஆய்வு செய்துள்ளனர். இதுகுறித்து ஆராய்ந்தபின் ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், ஒலி இரைச்சலின் அதிர்வெண் கடந்த மார்ச் முதல் மே வரை 50% குறைந்துள்ளதாக கூறியுள்ளனர்.