இரண்டு வருடத்திற்குள் கொரோனா முடிவுக்கு வரலாம்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இந்த வைரஸ் பாதிப்பால், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து தான் வருகிறது.
இந்நிலையில், இந்த வைரஸை தடுக்க, தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளது. ரஷ்யாவில் ஏற்கனவே தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் புனேயில் உள்ள செரம் இன்ஸ்டிடியூட் என்ற நிறுவனம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட பரிசோதனையில் முன்னேற்றம் கண்டுள்ளதாகவும், பாரத் பயோடெக், சைடஸ் காடிலா ஆகிய இரண்டு நிறுவனங்களும் முதல்கட்ட சோதனையை முடித்து இரண்டாம் கட்ட சோதனைக்கு முன்னேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் கூறுகையில், இரண்டு வருடத்திற்குள் கொரோனா முடிவுக்கு வரலாம் என நம்புகிறோம் என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், 1918-ம் ஆண்டு ஸ்பானிஷ் காய்ச்சல் பரவிய போது, இரண்டு வருடத்திற்கு பிறகு முடிவுக்கு வந்தது. இப்பொது பிரச்னை என்னவென்றால், அதிக தொழில்நுட்பம் வைரஸ் அதிக அளவில் பரவ வழிவகுக்கிறது. அதே நேரம், அந்த தொழில்நுட்பம், கொரோனா பரவலை தடுக்கவும் உதவும் என தெரிவித்துள்ளார்.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…