ஜப்பானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதியதாக 90 பேருக்கு உருமாற்றம் அடைந்த கொரானா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வருட காலமாக உலகை ஆட்டிப் படைத்து வரும் கொரோனா வைரஸ் தாக்கம் தற்பொழுதும் குறையாத நிலையில் பல்வேறு நாடுகளில் இதற்கான தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இருப்பினும் கொரோனா வைரஸ் தாக்கம் முற்றிலுமாக இன்னும் குறையாத நிலையில், அண்மையில் இங்கிலாந்தில் புதிய வகை உருமாற்றம் அடைந்த கொரோனாவும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த உருமாற்றம் அடைந்த கொரோனா பழைய கொரோனா வைரஸை விட அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்திருந்த நிலையில், இந்த கொரோனா வைரஸ் பிற நாடுகளுக்கும் தற்பொழுது பரவ ஆரம்பித்துள்ளது.
ஜப்பானில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தற்பொழுது கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஜப்பானில் புதிதாக 90 பேருக்கு உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…